சட்ட மேலவைக்கு நடைபெற இருக்கும் தேர்தலைப் பற்றி பல பட்டதாரிகள் என்ன என்று கூட தெரிந்து கொள்ள வில்லை. எனக்குத் தெரிந்த சிலருக்கு நான் விண்ணப்பங்களை கொடுத்த போது அவர்களுக்கு எப்போது யாருக்கு எதற்காக வாக்களிக்கப் போகிறோம் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
மத்திய அரசுக்கு எப்படி பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற ம் என இருசபைகள உள்ளதோ அதைப் போல மாநிலங்களில் சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை என இரு அமைப்புக்கள் பல மாநிலங்களில் இருக்கின்றன. நம் தமிழ் நாட்டிலும் ஆங்கிலேயர்களால் ஆரம்ம்பிக்கப்பட்ட சட்ட மேலவை 1986 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதற்கு ஆசிரியர்கள் வாக்களித்து 7 உறுப்பினர்களையும் பட்டதாரிகள் 7 உறுப்பினர்களையும் சட்ட மன்ற உறுப்பினர்கள் 26 உறுப்பினர்களையும் ஊராட்சி மன்ற அமைப்பில் உள்ளவர்கள் 26 உறுப்பினர்களையும் வாக்களிப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
11+1+3 அல்லது 10+2+3 என்ற கல்வித் திட்டத்தில் 2007ல் அல்லது அதற்கு முன் பட்டம் பெற்றவர்கள் தங்களை வாக்காளர்ப்பட்டியலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவங்களை http://www.elections.tn.nic.in/ என்ற இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகராட்சி எல்லைக்குள் இருப்பவர்கள் தங்கள் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் கொடுக்க வேண்டும். மற்றவர்கள் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நம்முடைய குரல் சட்ட மேலவையில் ஒலிக்க நாம் நம்முடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். எனவே பட்டதாரிகள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துவிடுங்கள்.
No comments:
Post a Comment